செய்திகள் இந்தியா
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
புதுடெல்லி:
ஓலா, உபேர் போல செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவையை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
இந்த திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து முதல் மாநிலமாக மகாராஷ்டிராவில் விரைவில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதே திட்டத்தை டெல்லி அரசும் அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லி கூட்டுறவுத் துறை அமைச்சர் ரவீந்தர் இந்த்ராஜ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஓலா, உபேர் போல செயலி அடிப்படையிலான கூட்டுறவு டாக்ஸி சேவைக்கான திட்டத்தை தயாரிக்க அவர் உத்தரவிட்டார்.
இந்தத் திட்டத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை. இதனால் பயணக் கட்டணமும் குறையும் என்பதால் ஓலா, உபேர் நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த சேவைக்காக டாக்ஸி ஓட்டுநர்களை கொண்ட கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
