நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை

புது டெல்லி: 

இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி தில்லியில்  நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இது பெண்களை அவமதிக்கும் செயல்' என்று  எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் இந்தியாவில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் முத்தாகி 6 நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார்.

அவருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தில்லியில் வெள்ளிக்கிழமை விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது காபூலில் மீண்டும் இந்திய தூதரகம் திறப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது ஆகியவற்றை இந்தியா உறுதி செய்தது.

மேலும், ஆப்கனின் மண்ணை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று முத்தகி உறுதி அளித்தார்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், தேர்தல்களின்போது பெண்களின் உரிமைகளை பிரதமர் மோடி அங்கீகரிப்பது போன்று அவர்களின் வசதிக்கேற்ப பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், பெண்களை முதுகெலும்பாகவும் பெருமையாகவும் கொண்ட இந்தியாவில், மிகவும் திறமையான பெண்களில் சிலருக்கு இந்த அவமானம் எப்படி அனுமதிக்கப்பட்டது? பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்கள் இடம்பெறாதது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset