நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பங்கோர் தீவில் மாசிமக திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்

பங்கோர்:

பேரா மாநிலத்தில் சுற்றுலா துறைக்கு புகழ் பெற்று விளங்கும் பங்கோர்  தீவில் உள்ள ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மாசி் மக திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட வேளையில் சுற்றுப் பயணிகளும் வருகை அளித்தனர்

தங்களின் காணிக்கை செலுத்த நாடு முழுவதிலும் இருந்து வருகை அளித்தனர்.

இம்மாநிலத்தில் மிகப் பெரிய அளவியல் கொண்டாடப்படும் மாசி மக திருவிழா இதுவாகும்.

மீன பிடி தொழில் கொண்டுள்ள இங்கு வசித்து வரும் மக்கள் குறிப்பாக சீன சமுகமும் இந்துகளுடன் இணைந்து இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இங்கு கொண்டாடபட்ட இவ்விழாவில நேர்த்தி கடனை செலுத்த அதிகமான சீனர்கள.  திரண்டது பலரின் கவனத்தையும் அது ஈர்த்தது .

பங்கோர், சுங்கை பினாங் பெசார் நீர்முனையில் அமைந்துள்ளது.  ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் பாங்கோரில் உள்ள ஒரே இந்துக் கோயிலாகும்.மேலும் மலேசியாவின் கடல் நோக்கிய  ஆலயமாகும்.  

இந்த ஆலயம் 2019 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு சிறப்புடன் காட்சியளிக்கிறது.

இந்த் ஆலயம் சக்தி வாய்ந்த ஆலயமாக கருத்தப்படுவதால் இந்த விழாவில் மட்டும் அல்ல விடுமுறை காலங்களிலும் பக்தர்கள் வருகை புரிந்து பிராரத்தனை செய்து  வருகிறர்கள்.

தற்பொழுது பள்ளி முறையாகவும் மற்றும் வார இறுதியில் இம்முறை இவ்விழா  நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை முதல் கொண்டு அதிகமான பக்தர்கள் திரண்டு முதல் நாள் ( வெள்ளிக்கிழமை)  நடைபெற்ற சக்தி கரகத்தைக் காண பக்தர்கள் குவிந்தனர்.

நள்ளிரவு முதல. கொண்டு எல்லையில்லா பக்தர்கள  கூட்டம் பால், குடம், அக்னி சட்டி , கரகம், காவடிகள் சுமந்து வந்து  காணிக்கை செலுத்தினர்.

இவ்வாண்டு வரலாறு  காணாத பக்தர்கள் திரண்டனர். அதிகமான 
சுற்றுப் பயணிகளும் வருகை அளித்ததுடன் இவ்விழா சிறப்புடன் நடைபெற மக்களும் பேராதரவு வழங்கியதாக ஆலயத் தலைவர் ஜெ. மோகனதாஸ் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset