நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் மாசி மக திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

ஈப்போ:

ஈப்போ பேர் பார்க் அன்னை பராசக்தி பத்திர காளியம்மன்  ஆலயத்தில் மாசி மக திருவிழா மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது.

பேராவில்  மிகவும்  பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஒன்றாக திகழும் இந்த ஆலயத்தில் பக்தர்கள் பால்  குடம், கரகம் , அக்னி சட்டி, காவடிகள் ஏந்தி வந்து அம்பாளுக்கு காணிக்கையாக  செலுத்தி பிரார்த்தனை செய்தனர்.

இன்று காலை 8 மணியளவில் ஈப்போ , ஜாலான் ஹோஸ்பிட்டல் வழியில் உள்ள ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் இருந்து ஆலயத்தின் சார்பில்  சக்தி கரகம் ஏந்தி வர பக்தர்கள் புடை சூழவும் உடன் பலர் பால் குடம் ஏந்தி காலை 9 மணியளவில் ஆலயத்தை வந்தடைந்தனர்.

இந்த ஆண்டு ஆலயத் திரு விழா,  மிகவும் சிறப்புடன் நடைபெற்றதாகவும்  பக்தர்கள் ஆகம முறைப்படி  நெறிமுறைகளை பின் பற்றியது மிகவும் மகிழ்ச்சியளித்தாகவும் ஒத்துழைப்பு வழங்கி ஆதரவு அளித்த அனைவருக்கும் ஆலயத் தலைவர் 
க. நாராயணசாமி பிள்ளை நன்றியைக்  கூறிக்கொண்டார்.

ஆலயத்தில் நடைபெற்ற நித்திய பூஜைக்குப் பின்னர் அம்மபாள்  சர்வ அலங்காரத்துடன் ஆலயம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள் .

இவ்விழாவை கண்டு களிக்க பெரும் திரளானோர் கலந்துக்கொண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset