நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்களுக்கு இஸ்ரேலிய விசா விலக்கா?: அரசாங்கம் மறுப்பு

புத்ராஜெயா -

இஸ்ரேல் செல்லும் மலேசியர்களுக்கு  விசா விலக்கு அளிப்பதாக கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.

இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இந்த கூற்று இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உரையைக் கேட்கும் பிரதிநிதிகளில் ஒருவராக நான் இருந்தேன்.

ஆனால் குறிப்பிட்ட படத்தை வெளியிட்டு இஸ்ரேல் செல்லும் மலேசியர்களுக்கு  விசா விலக்கு அளிக்கப்படும் என சித்தரிக்கப்பட்டுள்ளது.

எனக்கும் மலேசிய அரசாங்கத்திற்கும் எதிராக ஒரு தீய, அவதூறான கதையை உருவாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று நான் நினைக்கிறேன் என்றார் அவர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset