நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அஸ்தி அறிவியல் விழாவில் 40,000 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்: டாக்டர் முஹம்மத் யூனுஸ்

கோலாலம்பூர்:

அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க இயக்கமான அஸ்தியின் அறிவியல் விழாவில் 40 ஆயிரம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த எண்ணிக்கை உயரவும் வாய்ப்புகள் உள்ளது என்று அஸ்தியின் தலைவர் டாக்டர் முஹம்மத் யூனுஸ் யாசின் கூறினார்.

தமிழப்பள்ளி மாணவர்களிடையே அறிவியல், கண்டுபிடிப்பு ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் 17 ஆண்டுகளுக்கு முன் இந்த அறிவியல் விழா தொடங்கப்பட்டது.

இவ்வாண்டு 18ஆவது ஆண்டாக இவ்விழா நடைபெற்வுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் பள்ளி ரீதியில் இப் போட்டி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து பல பிரிவுகளாக இவ்விழா நடைபெறவுள்ளது.

இப் பிரிவுகளின் வாயிலாக தேர்வு செய்யப்படும் 70 முதல் 100 பள்ளிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

இவ்வாண்டு விழாவில் 400 தமிழ்ப்பள்ளிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 40 ஆயிரம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இவ்விழாவில் பங்கேற்க வருவார்கள் என நாங்க நம்புகிறோம் என்று யூனுஸ் கூறினார்.

கடந்த காலங்களை போன்று பல புதுமைகளை உள்ளடக்கி இந்த அறிவியல் விழா நடைபெறவுள்ளது.

குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும். இதுவே இவ்விழாவின் இலக்கு என்று அறிவியல் விழாவில் இயக்குநர் சுபாஷ் கிருஷ்ணன்  கூறினார்.

முன்னதாக 2024ஆம் ஆண்டுக்கான அறிவியல் விழாவை தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.

அஸ்தியின் அறிவியல் விழா தமிழ் பள்ளி மாணவர்களிடையே மிக பெரிய அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் இந்த அறிவியல் விழா தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.

இவ்விழாவை நடத்துவதற்கு அஸ்தி நிதி பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.

அப்ப பிரச்சனைகளுக்கு மித்ராவின் வழி தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset