நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பணிக் குழு இருந்தாலும் மித்ரவை தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு நிர்வகிக்கும்: துணையமைச்சர் சரஸ்வதி

கோலாலம்பூர்:

பிரதமர் துறையில் சிறப்பு பணிக் குழு இருந்தாலும் மித்ரா நடவடிக்கைகளை
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு நிர்வகிக்கும்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இதனை கூறினார்.

மித்ரா கடந்த காலங்களில் பிரதமர் துறையின் கீழ் இருந்தது. தற்போது அது தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டு உள்ளது.

அதே வேளையில் மித்ராவுக்கு என சிறப்பு பணிக் குழுவை பிரதமர் அறிவித்துள்ளார். அதற்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த மாற்றத்தால் சமுதாயத்தில் பல குளப்படிககள், சந்தேகங்கள், எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

எது எப்படி இருந்தாலும் பிரபாகரன் தலைமையிலான குழு மித்ரா தொடர்பான ஆலோசனைகளை வழங்கும்.

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தான் மித்ராவை முழுமையாக நிர்வகிக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதே வேளையில் மித்ராவில் கடந்த கால தவறுகள் ஏதும் நடக்கக் கூடாது என்பதில் நானும் அமைச்சரும் உறுதியாக உள்ளோம்.

தமிழ் பாலர் பள்ளிக்கு தொடர்ச்சியாக நிதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பாலர் பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் தமிழ்ப்பள்ளிக்கு சென்றனர்.

அம்மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்து எந்தவொரு பதிவுகளும் இல்லை. இதை நான் ஓர் உதாரணமாக கூறுகிறேன்.

இப்படி முறையான பதிவுகளும் ஆவணங்களும் இல்லாமல் மித்ரா இருக்க முடியாது.

இந்த அடிப்படை முதலில் சரி செய்யப்பட வேண்டும். அதன் பின் மித்ராவின் நடவடிக்கைகளும் திட்டங்களும் தொடங்கும் என்று துணையமைச்சர் சரஸ்வதி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset