நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழில் துறை நீதிமன்றத்தின் தலைவரின் ஒப்பந்தம் 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: ஸ்டீவன் சிம்

புத்ராஜெயா:

மலேசிய தொழில்துறை நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கான நியமனக் காலம் நான்கு ஆண்டுகளுக்கு அதிகரிப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இது 2 ஆண்டுகளாக இருந்தது என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

சேவைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற நடைமுறையின் சுமூகத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒரு சீர்திருத்தம் என்றார்.

முன்னதாக தொழில்துறை நீதிமன்றத்தின் தலைவர் நியமனம் மிகவும் குறுகியதாக உள்ளது.

அது இரண்டு வருடங்கள் மட்டுமே. புதிய நியமனம்,  புதுப்பித்தல் செயல்முறை மிக நீண்ட காலம் எடுக்கிறது.

இது நீதிமன்ற விவகாரங்களை தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல், நியாயமான சேவை உத்தரவாதம் இல்லாததற்கும் காரணமாகிறது என எனக்கு தொடர்ச்சியான புகார்கள் கிடைத்தது.

இதன் அடிப்படையில் தான் இப்பதவிக்கான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மலேசிய தொழில்துறை நீதிமன்றத்தின் தலைவர்களின் ஒப்பந்தம், இட மாற்ற கடிதங்கள் வழங்கும் நிகழ்வு பெர்கேசோ தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பின் பேசிய அமைச்சர் ஸ்டீவன் சிம் மேற்கண்டவாறு கூறினார்.

முன்னதாக அம்ரிக் சிங், ஈஸ்வரி மேரி, அகஸ்டின் அந்தோணி, பரமலிங்கம் துரைசாமி , சையத் நோ சைட் நசீர் ஆகிய ஐந்து புதிய தலைவர்களை சிம் அறிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset