நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை 1998ஆம் ஆண்டுடன் ஒப்பிட முடியாது: பிரதமர்

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தாலும் நாட்டின் தற்போதைய நிலை மிகவும் சிறப்பாக உள்ளது.

இதனால் 1998 ஆம் ஆண்டு நிலவரத்துடன் இன்று நாட்டின் பொருளாதார நிலையை ஒப்பிட முடியாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கடந்த 1998 ஆம் ஆண்டில் ரிங்கிட் வீழ்ச்சிக்கு  கண்டது.

அப்போது கூடுதலாக, நாட்டில் அன்னிய முதலீடு இல்லாத நிலையில் பணவீக்கம், வேலையின்மை ஆகியவை அதிகமாக இருந்தது.

ஆனால் இப்போதை நிலை வேறுப்பட்டது. நாம் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும்.

மலேசியா வரலாற்றில் மிகப் பெரிய முதலீட்டை பெற்றுள்ளது.

பண வீக்கம் தொடர்ந்து குறைகிறது. வேலையின்மை விகிதமும் குறைகிறது.

உண்மையின் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அண்டை நாடுகளைப் போலவே மீட்சித் தன்மையை கொண்டுள்ளது.

ரிங்கிட் வீழ்ச்சியை ஒப்புக்கொள்வது கவலைக்குரியது என்றாலும், இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை எந்த வகையிலும் பாதிக்காது.

கோலாலம்பூரில் மெனாரா எக்ஸ்சேஞ்ச் 106ஐ திறந்து வைத்த பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டின் வரலாற்றில் மலேசியா சமீபத்தில் அதிக அளவு அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டைப் பெற்றதை இது கருத்தில் கொள்கிறது. 

எனினும், அரசாங்கம் இதனை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை அல்லது வீழ்ச்சியைப் புறக்கணிக்கவில்லை.

நிலைமையைத் தணிக்க தினசரி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset