நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளை அரிசியின் வகை, விலை இன்று மாலை இறுதி செய்யப்படும்: பிரதமர்

கோலாலம்பூர்:

வெள்ளை அரிசியின் வகைபாடு, விலை ஆகியவை இன்று மாலை இறுதி செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  கூறினார்.

தேசிய வாழ்வாதார நடவடிக்கை கவுன்சிலின் சிறப்புக் கூட்டத்தில் முக்கிய உணவுப் பொருட்களின் விற்பனை விலையை நிர்ணயிப்பது உள்ளிட்டவை குறித்து இன்று விவாதிக்கப்படும்.

மலேசியா மடானி வெள்ளை அரிசு குறித்தும் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. ஆனால் அரிசி பிரச்சினை பற்றி மட்டும் கேள்வி கேட்க வேண்டாம்

ஏனெனில் தற்போது மீன், கோழி, இறைச்சி, காய்கறிகள் போன்ற பிற பொருட்களை மலிவான விலையில் விற்பனை செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மெனாரா எக்ஸ்சேஞ்ச் 106ஐத் திறந்து வைத்த பின் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஶ்ரீ அமிர் ஹம்சா உட்பட பல கலந்து கொண்டனர்.

அரிசியின் விலை குறித்த அறிவிப்பை அரசே வெளியிட வேண்டும்.

ஆனால் இந்த விவகாரத்தில் யாராவது முன்மொழிந்தால் தவறில்லை.

முன்மொழியப்படும் விலை சாத்தியமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset