நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

Gloria Jean's Coffee, 1901 Frankfurter  புதிய கிளைகளை அமைக்க 62 மில்லியன் ரிங்கிட் முதலீடு: இவான் பெனடிக்

கோலாலம்பூர்:

Gloria Jean's Coffee, 1901 Frankfurter ஆகியவற்றின் கிளைகளை அமைக்க 61 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்படவுள்ளது.

பெர்னாஸின் சொந்த நிறுவனமான மைஃபிரான்சாய்ஸ் இந்த முதலீட்டை செய்யவுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு  அமைச்சர் டத்தோ இவான் பெனடிக் கூறினார்.

அமைச்சின் கீழ் பெர்னாஸ் இயங்கி வருகிறது. ஃபிரான்சாய்ஸ் தொழில் துறை மேம்பாட்டிற்கு இது முக்கிய பங்கை ஆற்றி வருகிறது.

இதன் அடிப்படையில் Gloria Jean's Coffee 50 புதிய கிளைகளையும் 1901 Frankfurter 10 புதிய கிளைகளையும் திறக்கவுள்ளது.

வரும் 2029ஆம் ஆண்டுக்குள் இக்கிளை நிறுவனங்கள் கட்டம் கட்டமாக திறக்கப்படும்.

இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 900 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்,

மேலும் இம்முயற்சி இது அதிக வாய்ப்புகளைத் திறக்கிறது.

2030 ஆம் ஆண்டளவில் 100 பில்லியன் ரிங்கிட் உரிமை விற்பனையின் இலக்கு மதிப்புடன் மலேசியாவில் தொழில் முனைவோர் திறனை அதிகரிக்கிறது.

பங்சார் சௌத் மெனாரா பெர்னாஸில் உள்ள Gloria Jean's Coffee, 1901 Frankfurter கடைகளை திறந்து வைத்த அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் துணை அமைச்சர் டத்தோ ஆர்.ரமணன், பெர்னாஸ் தலைவர் டத்தோ ஹசிமா ஜைனுடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset