நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீனத்திற்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்; இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும்: மலேசியா வலியுறுத்து

கோலாலம்பூர்:

பாலஸ்தீனத்திற்கு முழு இழப்பீடு வழங்குவதுடன் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என மலேசியா வலியுறுத்தியுள்ளது.

அனைத்து சட்ட விதிமுறைகள், மனித உரிமைகளின் அடிப்படையில் இஸ்ரேலால் ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் மலேசியா நேற்றிரவு சர்வதேச நீதிமன்றத்தில்  ஆஜரானது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் 15 நீதிபதிகள் கொண்ட குழுவின் முன் நாட்டைப் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

50க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கெனவே ஐநா பொதுச் சபை  ஆக்கிரமிப்பின் சட்டரீதியான விளைவுகள் குறித்து கட்டுப்பாடற்ற கருத்தை வெளியிட்டன.

கேட்கப்பட்ட வாதங்களை அடுத்த திங்கட்கிழமை வரை சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அனைத்துலக நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் டத்தோ அஹ்மட் தெரிருடின் முகமட் சலே உடன் வந்திருந்த முகமட் ஹசான்,

பாலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று மலேசியா வலியுறுத்துகிறது என்று வாதிட்டார்.

சுயநிர்ணயம் என்பது நாடுகளுக்கிடையேயான இருதரப்பு விவகாரம் அல்ல என்ற கொள்கையை மலேசியா வலியுறுத்துகிறது. 

இது சர்வதேச சட்ட விதிமுறைகளைக் குறிக்கிறது.

சுயநிர்ணய உரிமையின் முக்கிய கூறுகளான நான்கு அடிப்படைகளை அடிப்படையாகக் கொண்ட உரிமைகளைப் பாதுகாக்கும் கொள்கையில் ஐ.நா மற்றும் அனைத்து நாடுகளும் சட்டப்பூர்வ அக்கறை கொண்டவை என்று மலேசியாவும் வலியுறுத்துகிறது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset