நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இரு சந்திப்புகளுக்கு பிறகும் மொஹைதின் - ஹாடி இடையே கருத்து முரண்பாடுகள்

கோலாலம்பூர்:

இரு சந்திப்புகளுக்கு பிறகும் மொஹைதின் - ஹாடி இடையே கருத்து முரண்பாடுகள் நிலவுவதாக தகவல்கள் கூறுகிறது.

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சமீபத்தில் தனது பெர்சாத்து தலைவர் மொஹைதின் யாசினை சந்தித்தார்.

ஆனால் இருவருக்கும் இடையேயான விஷயங்களை சுமூகமாக மாற்றுவதில் இந்த இணக்கம் தோல்வியடைந்ததாக தெரிகிறது.

உண்மை என்னவென்றால், இரு தலைவர்களுக்கு இடையிலான பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

தேசியக் கூட்டணியில் மொஹைதின் தலைவராகவும், ஹாடி துணைத் தலைவராகவும் உள்ளார்.

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் அடுத்த கட்சித் தேர்தலில் தனது நிலையைப் பாதுகாக்கப் போவதில்லை என்ற தனது முடிவை டொடர்ந்து மொஹைதினுக்கும் ஹாடிக்கும் இடையே இருந்த உறவுகள் பாதித்து என கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset