நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புரோட்டான் X70 காரில் வந்து பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளி நபர்

கோலாலம்பூர்: 

சந்தைக்குக் காரில் புரோட்டான் X70 காரில் வந்து பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளி நபரைச் சமூக நல இலக்கா கண்டறிந்துள்ளது. 

இரண்டு சிறிய கைகளைக் கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவர் இரவு சந்தையில் ஐந்து மணி நேரத்திற்குள் பொதுமக்களிடமிருந்து பிச்சை எடுப்பதன் மூலம் 500 வெள்ளி வரை சம்பாதிக்க முடிந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

அந்த நபர் தனது அடையாள அட்டையை எடுக்க புரோட்டான் எக்ஸ்70 பிரீமியம் காரின் கதவைத் திறந்தபோது சமூக நல இலக்கா அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 

பிச்சை எடுப்பதன் மூலம் கிடைத்த பணத்தில் தாம் புரோட்டான் X70 பிரீமியம் காரை வாங்கியதாக அவர் கூறினார்.

புரோட்டான் X70 பிரீமியம் காரின் விலை 127,100 வெள்ளியாகும். 

அந்த மாற்றுத்திறனாளி நபர், அங்கியும் தொப்பியும் அணிந்த நிலையில், இரவுச் சந்தை வியாபாரிகளின் குடைகளுக்கு இடையே நின்று கொண்டு, அந்த வழியாகச் செல்லும் மக்களின் அனுதாபத்தைக் கேட்டு ஒரு காகிதப் பையை வைத்திருந்ததைக் கண்டதாக  சமூக நல இலக்கா அதிகாரிகள் தெரிவித்தனர். 

இருப்பினும், சமூக நல இலக்கா அதிகாரிகள் அவரை அணுகி விசாரித்தவுடன், அவர் பல முறை வற்புறுத்தினாலும், வாய் பேசாதவர் போல் அமைதியாக இருந்தார்.

தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு அவரிடம் உண்மையைக் அதிகாரிகள் கண்டறிந்தனர். 

மேலும் விசாரணையில் அந்த நபர் குவாந்தான், பாலோக்கில் வசித்து வந்ததாகவும், இரவு சந்தைகளுக்கு சென்று பிச்சை எடுப்பதாகவும் கண்டறியப்பட்டது.

2001-ஆம் ஆண்டு முதல் அவர் மாற்றுத்திறனாளி உதவித்தொகையாக மாதம் 450 ரிங்கிட் பெறுவதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்,

இருப்பினும், அமலாக்க அதிகாரிகளால் எச்சரிக்கையுடன் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset