நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருவனந்தபுரத்தில் இருந்து முதல் ஏர் ஆசியா விமானம் மலேசியா வந்தடைந்தது

சிப்பாங்:

கேரளா திருவனந்தபுரத்தில் இருந்து முதல் ஏர் ஆசியா விமானம் மலேசியா வந்தடைந்தது.

இதன் மூலம் ஏர் ஏசியா இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான தனது விமானப் பயண சேவையை மேலும் விரிவுபடுத்தி உள்ளது.

ஏர் ஆசியா ஏற்கெனவே மலேசியாவுக்கும் கேரளாவின் கொச்சினுக்கும் நேரடி பயண சேவையை கொண்டுள்ளது.

தற்போது இரண்டாவது வழியாக திருவனந்தபுரத்திற்கு ஏர் ஆசியா நேரடி பயணச் சேவையை தொடங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் திருவனந்தபுரத்தில் இருந்து முதல் ஏர் ஆசியா ஏகே8 விமானம் கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தை வந்தடைந்தது.

சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ தியோங் கிங் சிங் அவ்விமானத்தில் வந்த பயணிகளை வரவேற்றார்.

ஏர் ஏசியா  குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி போ லிங்கமும் அவர்களை வரவேற்றார்.

மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே விமான இணைப்பை விரிவுபடுத்துவதில் ஏர் ஏசியாவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக அரசு பாராட்டுகிறது.

குறிப்பாக அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்புக்குப் பிறகு, அதிகமான பயணிகள் தங்களின் தாயகத்திற்குச் செல்ல உதவுகிறது என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset