நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஊடக மன்றத்தின் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது

புத்ராஜெயா:

மலேசிய ஊடக மன்றத்தை நிறுவுவதற்கும், அது தொடர்பான ஒரு குறிப்பிட்ட மசோதாவை உருவாக்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இது ஜூன் மாதம் 15-ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணையின் இரண்டாவது கூட்டத்திற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரைவு மசோதா உண்மையில் முந்தைய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு 2019-ஆம் ஆண்டில் சமர்ப்பிக்க பட்டியலிடப்பட்டது.

ஆனால் அச்சமயம் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தாமதமானது என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார். 

மடானி அரசுக்குப் பின், இந்த விவகாரம் மறுபரிசீலனை செய்யப்பட்டு மசோதாவை மேலும் வலுப்படுத்த சில திருத்தங்கள் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்றப்பின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று அவர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நேற்று, அரசாங்கம் பத்திரிகையாளர்களுக்கான மலேசிய நெறிமுறைக் குறியீட்டை மீண்டும் அறிமுகப்படுத்தியது. 

இந்த நடவடிக்கை நாட்டில் ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தாது என்று தகவல் தொடர்பு அமைச்சு  உறுதியளித்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset