நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயா, ஜொகூர்- அரசு சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்து அடுத்த வாரம் சந்திப்பு கூட்டம்

புத்ராஜெயா: 

முன்மொழியப்பட்ட ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) குறித்து விவாதிக்க மத்திய மற்றும் ஜொகூர் மாநில அரசு பிப்ரவரி 28-ஆம் தேதி சந்திப்பு நடத்தவுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹ்மி பாட்சில் தெரிவித்தார்.

அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் போக்குவரத்து, உள்துறை, பொருளாதாரம் மற்றும் நிதி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் குறித்து ஆராயப்படும் என்று ஃபஹ்மி கூறினார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம்  SEZ அமைப்பது தொடர்பாக விரிவான ஒருங்கிணைப்பு தேவை என்பதை வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார். 

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பொருளாதார மண்டலத்தை விரைவாக அமைப்பதற்கான சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஜனவரியில், ஜொகூர்-சிங்கப்பூர் SEZ ஐ உருவாக்க மலேசியா மற்றும் சிங்கப்பூர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

கடந்த ஆண்டு மே மாதம் ஜொகூர் அரசாங்கத்துடனான சந்திப்பிற்குப் பிறகு, பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லியால் SEZ முதலில் முன்மொழியப்பட்டது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு SEZ அமைப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்புப் பணிக்குழுவை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

SEZ இஸ்கண்டார் மலேசியா பிராந்தியம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் வணிக சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SEZ இலக்கு வைக்கும் துறைகளில் மின்னணுவியல், நிதிச் சேவைகள், வணிகம் தொடர்பான சேவைகள் மற்றும் சுகாதாரம் ஆகியவை அடங்கும்.

கடந்த ஆண்டு, ஜொகூர் பல்வேறு துறைகளில் 70.6 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளது.

சிங்கப்பூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset