நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரு கோப்பை மைலோ பானத்தின் விலை 15.90? கேபிடிஎன் விசாரணை 

ஜொகூர் பாரு: 

கோத்தா திங்கியிலுள்ள ஓர் உணவகத்தில் ஒரு கோப்பை மைலோ பானம் 15.90-க்கு விற்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உணவகத்தின் விலைப்பட்டியலில் அந்த விலை குறிப்பிட்டிருந்தாலும் இது குறித்து பயனீட்டாளர்களின் புகார் கிடைத்ததால் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் விசாரணை மேற்கொண்டது.

ஜொகூர் மாநில உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் கோத்தா திங்கி, டேசாரு ரிசார்ட்டில் இயங்கும் உணவகத்தின் உரிமையாளர்களுக்கு, பிரிவு 21, விலைக் கட்டுப்பாடு மற்றும் ஆதாய எதிர்ப்புச் சட்டம் (AKHAP) 2011 இன் படி நோட்டிஸ் வழங்கியுள்ளது. 

மேலும் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும். அதன் பின், மேலதிக விசாரணையை மேற்கொள்ள முடியும்.

மைலோ பானத்தின் விலை குறித்து வாடிக்கையாளர் அதிருப்தி தெரிவிக்கும் காணொலி பதிவு சமூக ஊடகங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஜொகூர் மாநில உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் இயக்குனர், லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமோ கூறினார். 

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரால் பகிரப்பட்ட கட்டண ரசீது மூலம், ஒரு கோப்பை மைலோ பானம்  15.90 வெள்ளி கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் மூன்று கோப்பைகளுக்கு மொத்தம் 47.40 வெள்ளி கட்டணம் வசூலீக்கப்பட்டது.  

மேலும், ஒரு முட்டை ரொட்டி சானாய் 12.90-க்கு விற்கப்பட்ட நிலையில் ஒரு தோசையின் விலை RM10.90 -ஆக இருந்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தரப்பில் பல்வேறு உணவு மற்றும் பான விருப்பங்களை வழங்கும் ஹோட்டல் பகுதியில் இயங்கும் வளாகங்கள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதிக விலையில் உணவுகளும் பானங்களும் விற்கப்படுவதற்கான காரணத்தைக் கடையின் உரிமையாளர் தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset