நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தம்மீதான பொது தொந்தரவு குற்றச்சாட்டுகளை  தள்ளுபடி செய்ய இன்ஸ்பெக்டர் ஷீலா மனு

கோலாலம்பூர்:

தம்மீதான பொது தொந்தரவு குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யக் கோரி இன்ஸ்பெக்டர் ஷீலா மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனை இன்ஸ்பெக்டர் ஷீலாவின் வழக்கறிஞர் எம். மனோகரன்   உறுதிப்படுத்தினார்.

36 வயதுடைய தமது கட்சிக்காரர் எதிர்கொண்டுள்ள குற்றச்சாட்டுகள் அற்பமானவை என்ற அடிப்படையில் தாங்கள் நேற்று கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார்.

இன்று, நீதிபதி இல்லி மரிஸ்கா கலிசன், வழக்கறிஞரின் பிரதிநிதித்துவத்தை நீதிமன்றத்தில் புதுப்பிக்க மார்ச் 20ஆம் தேதியை நிர்ணயித்துள்ளார்.

சுமார் 20 பக்கங்களைக் கொண்ட தாக்கல் செய்யப்பட்ட பிரதிநிதித்துவத்தை மறுபரிசீலனை செய்ய மூன்று வாரங்கள் அவகாசம் தேவை என்று நீதிபதி தெரிவித்தார்.

அற்பமான காரணங்களுக்கு எனது கட்சிக்காரர் உண்மையில் அந்த பரபரப்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர் என்பதால், பிரதிநிதித்துவம் தாக்கல் செய்யப்பட்டது என்று அவர் விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது மனோகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset