நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகத் தாய்மொழி தினம்  பரவலாக அனுசரிக்கப்பட வேண்டும்: தமிழ் அறவாரியம்

கோலாலம்பூர்:

உலக தாய்மொழி தினம் பரவலாக அனுசரிக்கப்பட வேண்டும் தமிழ் அறவாரியம் கோரிக்கை முன்வைத்தது.

தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் 14ஆவது உலக தாய்மொழி தின கொண்டாட்டம்  தலைநகரில் நடைபெற்றது.

டேவான் பகாசா புஸ்தாகாவின் வாரியத் தலைவர் டத்தோ டாக்டர் முகமத் அனுவார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து சிறப்பித்தார்.

தொடக்க விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏற்பாட்டுக் குழு தலைவர் த.குகனேஸ்வரன்,

தமிழ் அறவாரியம் தொடர்ச்சியாக 14ஆவது ஆண்டாக இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

உலக தாய்மொழி தினம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு இந்த தினத்தின் மகத்துவம் கொண்டு சேர வேண்டும். இதுவே தமிழ் அறவாரித்தின் இலக்காக உள்ளது.

வரும் காலங்களில் இன்னும் சிறப்பான முறையில் இந்நிகழ்வு நடத்தப்படும்.

அதே வேளையில் தமிழ்ப்பள்ளிகள் உட்பட அனைத்து நிலையிலும் உலக தாய்மொழி தினம் பரவலாக அனுசரிக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset