நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செய்தியாளர்களின் நெறிமுறைகள் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் முயற்சியாகும் 

பெட்டாலிங் ஜெயா:

அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட செய்தியாளர்களுக்கான புதிய நெறிமுறைகள் ஊடகங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகும் என்று Lawyers for Liberty என்ற தனியார் சட்ட நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

தகவல் தொடர்பு துறையின் இந்தச் செயலானது செய்தியாளர்களுக்கான எதிரான அச்சுறுத்தல் என்று அந்நிறுவனத்தின் இயக்குனர் ஜைட் மாலேக் கூறினார்.

செய்தியாளர்கள் எதுபோன்ற செய்தி அறிக்கையை வெளியிட வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும் போது ஊடகத்திற்கான சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். 

நேற்று, தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பாட்சில் செய்தியாளர்களுக்கான புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்தினார்.

அதில் குறிப்பிட்டுள்ள எட்டு முக்கிய நெறிமுறைகளையும் செய்தியாளர்கள் பின்பற்ற வேண்டும். மேலும், இது ஊடக அங்கீகார அட்டை நிர்வாகத்திற்கான குறிப்பாகவும் பயன்படுத்தப்படும்.

1989-ஆம் ஆண்டு தேசிய ஊடக நிறுவனம் அறிமுகப்படுத்திய நெறிமுறைகள் கையேடு மறுமதிப்பாய்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

ஊடக உச்சமன்றத்தால் நெறிமுறைகள் மேற்பார்வை செய்த பின்னர் அது செயல்படுத்தப்படும் என்று ஃபஹ்மி கூறினார்.

ஊடக அங்கீகார அட்டைகளை ரத்து செய்யவும் தகவல் தொடர்பு துறைக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பின் 10 வது பிரிவை ஜைட் மேற்கோள் காட்டினார்.

பக்காத்தான் ஹராப்பான் அமைச்சர்கள் எதிர்கட்சியில் இருந்தபோது ஊடக சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிட்டதற்கு கடந்தகால ஆட்சேபனைகளை அவர் நினைவுபடுத்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset