நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தண்டனையாகத் தொழிலாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய முடியாது : மனிதவள அமைச்சர்

பெட்டாலிங் ஜெயா:

பல்வேறு நடத்தைகளுக்காக சம்பளப் பிடித்தம் செய்ததாகக் கூறப்படும் உணவகம் தொழிலாளர் சட்டங்களை மீறி அவ்வாறு செய்திருக்கலாம். 

மருத்துவ விடுப்பு எடுப்பது அல்லது அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வது போன்ற “தவறான செயல்களின்” பட்டியலை ராமேன் உணவகம் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது. அதில் அதிகப்பட்சமாக 500 வெள்ளி வரை சம்பளப் பிடித்தம் செய்யப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. 

இது போன்ற நடவடிக்கைகள் வேலைவாய்ப்புச் சட்டம் 1955 இன் பகுதி IV ஐ மீறுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி, சமூகப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வருமான வரி போன்ற சட்டத்தால் அனுமதிக்கப்படும் பிடித்தங்களைத் தவிர முதலாளிகள் ஊழியர்களின் சம்பளத்தை இதுபோன்ர காரணங்களுக்காகப் பிடித்தம் செய்ய முடியாது என்று அவர் கூறினார். 

ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் சம்பளப் பிடித்தங்களைச் செய்ய முதலாளிகளுக்கு அனுமதியில்லை என்று அவர் தெரிவித்தார். 

ஒழுங்கற்ற நடவடிக்கைகள் முறையான உள்நாட்டு விசாரணையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

மேலும், நடவடிக்கை எடுப்பதற்காகத் தொழிலாளர் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்டவர்களை அவர் வலியுறுத்தினார்.

பிரிவு 24(1) சட்டத்தின்படி ஒரு பணியாளரின் ஊதியத்திலிருந்து முதலாளியால் எந்தக் கழிவுகளும் செய்யப் படக்கூடாது என்று கூறுகிறது.

ஒரு குற்றத்திற்கு RM50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset