நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் நிலையான பொருளாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்: பிரதமர்

கோலாலம்பூர்:

நிலையான மனிதாபிமான பொருளாதாரத்தை உறுதி செய்ய கல்வியாளர்கள், நிதி நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் கூட்டாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக இஸ்லாமிய பொருளாதாரத்தின் தத்துவார்த்த நெறிமுறை பரிமாணங்களை சீரமைக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம்  கூறினார்.

நிலையான மனிதாபிமான பொருளாதாரத்தை உறுதி செய்வது அரசாங்கத்தின் தூரநோக்கு இலக்காக உள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு கல்வியாளர்கள், நிதி நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் கூட்டாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக இந்த விவகாரத்தில் கல்வியாளர்களின் அறிவுப் பணிகள் தொடர வேண்டும்.

மேலும் இஸ்லாமிய பொருளாதாரத்தின் தத்துவார்த்த நெறிமுறை பரிமாணங்களை சீரமைக்க வேண்டும்.

மடானி கொள்கைகளுக்கு ஏற்ப நடைமுறை பயன்பாடுகளை உருவாக்க வேண்டும்.

இஸ்லாமிய அனைத்துலக பொருளாதார மாநாட்டை தொடக்கி வைத்த பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset