நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அஸ்மான் அட்னான் புதிய கல்வி இயக்குநராக நியமனம்

புத்ராஜெயா: 

புதிய கல்வி இயக்குநராக அஸ்மான் அட்னான் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அவர் கல்வி இயக்குநராகத் அவர் பணியைத் தொடங்கினார். 

முன்னதாக, கடந்தாண்டு நவம்பர் மாதம் பிகாருதீன் கசாலி அப்பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் கல்வி அமைச்சகத்தின் பள்ளி செயல்பாடுகளுக்கான இயக்குநராக அஸ்மான் அட்னான் நியமிக்கப்பட்டுள்ளார். 

அஸ்மான் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் மலாய் துறையில் இளங்கலைப் பட்டமும், மலாயாப் பல்கலைகழகத்தில் தலைமைத்துவம் மற்றும் தலைமைத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அஸ்மான் கல்வித் துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். 

இதற்கு முன்னர், சிகாமாட் மாவட்டக் கல்வி அதிகாரியாகவும் ஜொகூர் மாநிலக் கல்வி துணை இயக்குநராகவும் கல்வி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset