நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாடு முதன்மை தரவு தளம் முடக்கப்படவில்லை: ஃபஹ்மி பட்சில் 

புத்ராஜெயா: 

மலேசியப் புள்ளியியல் துறையால் இயக்கப்படும் பாடு எனப்படும் முதன்மை தரவு தளம் முடக்கப்பட்டதாக வெளிவந்துள்ள தகவலைத் தகவல் தொடர்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

பாடு தளம் முடக்கப்பட்டதாக கூறி ஒரு மன்றத்தில் பரப்பப்பட்ட விவகாரம் குறித்துத் தனது அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்தது தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்சில் கூறியுள்ளார். 

தளத்திலுள்ள தகவல்களை ஆய்வு செய்ததில் அது பாடு தளம் அல்ல. மாறாக, தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் துணைப் பிரிவு என்பது கண்டறியப்பட்டது.

அனைத்துத் தரப்பினரும் எந்தவொரு தகவலும் பரப்பப்படுவதற்கு முன்னர் அதன் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்றும் ஃபஹ்மி வலியுறுத்தினார். 

இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல. இது சரி செய்ய ஊடகங்கள் உதவும்  என்று தாம் நம்புவதாக அவர் இன்று தனது அமைச்சில் நடந்த மலேசிய இதழியல் நெறிமுறைகளின் தொடக்க விழாவில் செய்தியாளர்களிடம் கூறினார். 

ஊடகங்கள் செய்திகளை விரைவாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளன ஆனால் அந்தச் செய்தி சமநிலையாக இருப்பதை உறுதி செய்ய தவறுகிறது. 

செய்தித் தலைப்புகள் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் அதே சமயம் சமூகத்தில் சிறிய தவறான குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

நாடு ஊடகச் சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துகிறது என்றாலும், அது முழுமையான சுதந்திரம் அல்ல.

உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிடும் தனிநபர்கள் அல்லது அமைப்புகளுக்கு, பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய தற்போதுள்ள சட்டங்களே போதுமானது என்றார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset