நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீன்வளர்ப்புத் தொழில்நுட்ப அறிவை வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள மலேசியா தயார் - மாட் சாபு

கோலாலம்பூர்: 

மீன்வளர்ப்பு தொடர்பான அறிவையும் தொழில்நுட்பத்தையும் பரஸ்பர நலனுக்காக வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்ள மலேசியா தயாராகவுள்ளது என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்தார். 

ஆசியாவிற்கான பிராந்திய மாநாட்டில் இருதரப்பு கலந்துரையாடல் அமர்வின் போது, ​​ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர் கியு டோங்யுவிடம் மலேசியாவின் தயார்நிலை குறித்துத் தெரிவித்ததாக மாட் சாபு தனது முகநூலில் குறிப்பிட்டார். 

மலேசியாவில் மீன்வளர்ப்பு தொழில் சிறந்த உற்பத்தி செயல்திறன் கொண்ட ஒரு வேகமாக வளர்ந்து வரும் தொழில் என்று அவர் கூறினார்.

நாட்டின் விவசாயம் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் பின் தங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், காலநிலை மாற்றத்தின் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கும் சர்வதேச ஒத்துழைப்பு முக்கியமானது.

மலேசியாவின் SMART விவசாய முயற்சியைப் பற்றியும் கியுவுடன் பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset