நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் ஃபொர் ஆல் முழக்கம் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களைக் கலக்கமடைய செய்யும் 

ஷா அலாம்: 

சிலாங்கூர் மாநிலத்தில் பாஸ் கட்சியின் PAS FOR ALL சுலோகமானது அம்மாநிலத்தில் உள்ள மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை கலக்கமடைய செய்யும் என்று அகெடெமி நுசந்தாராவை சேர்ந்த அஸ்மி உசேன் கூறினார். 

பழமைவாதம், கடும்போக்கு கொண்ட பாஸ் கட்சியின் கொள்கையானது இந்த சுலோகம் என்பது மக்களிடையே சென்று சேர்வதை வழிவகுக்கும் என்று அரசியல் பார்வையாளருமான அவர் தெரிவித்தார். 

பாஸ் கட்சியின் எழுச்சியால் நம்பிக்கை கூட்டணியில் உள்ள மலாய்க்காரர்களின் வாக்குகள் தேசிய கூட்டணிக்கு செல்லும் நிலையும் மறுப்பதற்கில்லை. 

இருப்பினும், மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் வாக்குகளைப் பெறுவதில் பாஸ் கட்சி கடும் சவால்களை சந்திக்கும் என்று அஸ்மி குறிப்பிட்டார். 

முன்னதாக, சிலாங்கூர் மாநிலத்தில் PAS FOR ALL என்ற முழக்கத்தை அக்கட்சி முன்னெடுத்துள்ளது. எதிர்வரும் 16ஆவது பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தைப் பாஸ் கட்சி வெற்றிக்கொள்ள இலக்கு கொண்டுள்ளது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset