நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மடானி வெள்ளை அரிசி திட்டம் கார்டெல்களுக்கு ஆதரவா?: பிரதமர் மறுப்பு

கோலாலம்பூர்:

அரசாங்கத்தின் மடானி வெள்ளை அரிசி திட்டம் கார்டெல்களுக்கு ஆதரவு என தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த தகவல்கள் அனைத்தும் குப்பையானது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மடானி வெள்ளை அரிசி மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு விநியோகம் அரசு உத்தேசித்து வருகிறது.

ஆனால் இது உள்ளூர், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை ஆக்கிரமிக்கும் கார்டெல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் என்ற பேச்சை அவர் மறுத்துள்ளார்.

மேலும் அரிசித் துறையில் கார்டெல் தலையீட்டைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

இப் புதிய திட்டம் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இது விரைவில் நடைபெறவிருக்கும் தேசிய வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்.

அரசு கார்டெல் தலையீட்டைக் குறைக்கிறது. இது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

மெனாரா மேபேங்கில் மேபேங்கின் மைஇம்பாக்ட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னர் பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset