நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விஷக் குளவி கொட்டி பல்கலைக்கழக மாணவி கீர்த்திகா மரணம்

ஈப்போ:

பல்கலைக்கழகத்தில்  கணக்கியல்  துறையில் தேர்வு எழுத விருந்த மாணவி விஷக் குளவி கொட்டி மரணம் அடைந்தார்.

இந்த சம்பவம் புந்தோங்கில், ஹார்மோனி  அடுக்குமாடி குடியிருப்பில்  நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் கீர்த்திகா சத்தியகுமார்  என்பவர்  இறந்தார்.  இவரது நல்லுடலுக்கு இன்று ( 19-2-24) இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு  புந்தோங்கில்  உள்ள மின் சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இரவு 8. 30  மணியளவில் இரவு உணவை உட்கொண்ட பின்னர் வீட்டில் பிரதான அறையில் ஓய்வெடுதுக் கொண்டிருந்தபோது  அங்குள்ள மின் விசிறியால் தாக்கப்பட்டு கீழே விழுந்த குளவி அவரது  இடது காலின் சுண்டு விரலில்  கொட்டியுள்ளது.

வலியால் துடித்துக்கொண்டிருந்ததைக் கண்டு  சுண்டு விரலில் சிக்கிய கொடுக்கை மீட்டு அந்த இடத்தில்  சுண்ணாம்பை  தடவி விட்டதாக தாயார் கி. அமுதா தெரிவித்தார்.

சில நிமிடங்களில் திடீரென்று மயங்கி விழுந்த மகளை உடனடியாக அருகில் உள்ள தனியார் கிளினிற்கு கொண்டுச் சென்றப் பின்னர் அங்கு உடல் நிலை மோசம் அடைந்ததாக தெரிவித்த பின்னர் அங்கிருந்து அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு வழங்கப்பட்ட முதலுதவி பயனளிக்காததால் அவர் இறந்ததாக கூறப்பட்டது.

போலி டெக்னிக் கல்லூரியில் அவர் மேல் கல்வியை  கணக்கியல் துறையில் ஆன் லைன் வழி தொடர்ந்துள்ளார்.

இந்தக் கல்வித் தொடர்பாக பினாங்கில்  உள்ள அறிவியல் கல்கலைக் கழகத்தில் இம்மாதம் 22ஆம் தேதி தேர்வு எழுதச் செல்ல விருந்த தகவலை அவரது தந்தை எஸ். சத்தியகுமார் கூறினார்.

குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் மூத்த மகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். 

இறந்த கீர்த்திகா இரண்டாவது மகள் ஆவார். 

மூன்றாவது மகள் இந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வை எழுத உள்ளார் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset