நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கோலாலம்பூரில் பாடகர் ஸ்ரீனிவாஸ், ZEE தமிழ் சரிகமப கலைஞர்களின்  மாபெரும் இசை நிகழ்ச்சி

கோலாலம்பூர்:

பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸுடன் இணைந்து தமிழ் சரிகமப கலைஞர்கள் படைக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 27ஆம் தேதி மாலை 5 மணி முதல் தலைநகர் விஸ்மா எம்சிஏவில் நடைபெறும் என்று விஷால் ஸ்ட்ரீமிக்ஸ் இயக்குநர் விஷால் கூறினார்

இந்தியாவில்  Zee தமிழ் வழங்கும் சரிகமப நிகழ்ச்சிக்கு மலேசியாவுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

May be an image of 9 people, people smiling, television and text

அப்படி அந்நிகழ்ச்சியில் பாடி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருக்கும் பாடகர்கள் மலேசிய மக்களை மகிழ்விக்க இங்கு வருகின்றனர்.

இந்த இசைக் குழுவினருக்கு பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையேற்க உள்ளார்.

அதே வேளையில் பிரபலம் வாய்ந்த அறிவிப்பாளர் அர்ச்சனா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

இப்படி இந்த நிகழ்ச்சி மலேசிய மக்களை மகிழ்விக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் இன்று ticket2u அகப்பக்கத்தின் வாயிலாக வாங்கிக் கொள்ளலாம்.

மிகவும் ஏற்புடைய விலையில் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. விரைந்து வாங்குபவர்கள்  அதிர்ஷ்ட குலுக்கலிலும்  பங்கேற்கலாம். 

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு  Zee தமிழ் சரிகமப இசை நிகழ்ச்சியை பார்க்கும் வாய்ப்புகளை பெறுவார்கள்.

ஆகவே டிக்கெட்டுகளை வாங்கி நிகழ்ச்சியை பார்ப்பதுடன் அதிர்ஷ்ட குலுக்கலையும் மக்கள் வெல்ல வேண்டும் என்று விஷால் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு விஷாலை 010 2131282 தொடர்பு கொள்ளலாம்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset