நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: அபாங் ஜோஹாரி

கூச்சிங்: 

சரவாக் அதன் விமான நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியவுடன், துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) போன்ற உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகளாவிய விமானப் போக்குவரத்து மைய நிலை மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்று சரவாக் ஆளுநர்  தான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி துன் ஓபேங் கூறியுள்ளார். 

இதில் துபாயை முன்னுதாரணமாகக் கொண்டால் தமது மக்களுக்குக் கூடுதல் பொருளாதார நன்மைகளைக் கொண்டு வர முடியும். 

கூடுதலாக, விமான கட்டணங்கள் மற்றும் பிற கூடுதல் மதிப்புகளை சமப்படுத்த விமான நிறுவனத்தை கையகப்படுத்தி நிறுவ விரும்புவதாகவும் அவர் கூறினார். 

கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி, சரவாக் அரசாங்கத்தால் MASwings Sdn Bhd ஐ கையகப்படுத்துவது இந்த ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset