நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறையை 4.3% குறைக்க அரசாங்க முயற்சி: ஃபாஹ்மி

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 4.3 விழுக்காடாக குறைக்க ஒற்றுமை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி தெரிவித்துள்ளார். 

கடந்தாண்டில் சவாலான வெளிப்புற சூழலை எதிர்கொண்ட போதிலும், 2023-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மலேசியா மூன்று விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார். 

நாடு சரியான பொருளாதார பாதையில் செல்வதை உறுதி செய்ய, முதலீடு, புதிய வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்துதல், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விலைகள் ஆகிய மூன்று பொருளாதார அடிப்படைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்த மூன்று அடிப்படைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் நாடு சரியான பொருளாதாரப் பாதையில் பயணிப்பதைக் காட்டுகிறது. 

நாட்டில் வேலையின்மை விகிதம் குறைந்து வரும் அதே வேளையில் அந்நிய நேரடி முதலீடு (FDI) அதிகரித்து வருகின்றது.நிதிப் பற்றாக்குறையும் குறைந்துள்ளது. 

2022-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 5.6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 5.0 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அதை 4.3 சதவீதமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளதாகவும் ஃபாஹ்மி கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset