
செய்திகள் மலேசியா
PAM சங்கத்தின் சொந்தக் கட்டிட நிதிக்கான இரவு விருந்து
கிளானா ஜெயா:
மலேசிய கடையநல்லூர், தென்காசி மக்கள் அதிகம் அங்கம் வகிக்கும் அமீருல் மூமினீன் சங்கத்தின் (PAM - Persatuan Ameerul Mukminin) சார்பில் நடத்தப்பட்ட சொந்தக் கட்டிட நிதிக்கான இரவு விருந்து சிலாங்கூர் சுங்கத் துறை மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக சங்கத்தின் தலைவர் துவான் ஹாஜி அப்துல்லாஹ் உரையாற்றுகையில் கடந்த 28 ஆண்டுகளாக இந்த சங்கம் சிறப்பாக செயலாற்றி வருவதாகவும் சங்கத்திற்கு நிரந்தர வருவாய் வேண்டியும் சொந்த அலுவலகம் வேண்டியும் இந்தக் கட்டிட நிதி வசூலிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
கடையநல்லூர், தென்காசி மக்கள் பினாங்கிலும் சிங்கப்பூரிலும் அடர்த்தியாக வாழ்ந்தாலும் சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேச மக்களின் நலுனுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
புதிய கட்டிடம் கிளானா ஜெயா வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி ஒரு குடும்ப தின நிகழ்வாகவும் ஒன்றுகூடல் நிகழ்ச்சியாகவும் இருந்தது.
மெட்ரோ செக்கியூரிட்டி குழுமத்தின் தலைவர் ஹாஜி அப்துல் காதர் கட்டிட நிதிக்கான முதல் காசோலையை வழங்கினார். அவருக்கு சங்கத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது,
மெல்லிசை நிகழ்ச்சி, அதிர்ஷ்டக்குலுக்கு, நடிப்பிசை, மேஜிக் நிகழ்ச்சி என்று பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றிருந்தன,
பொதுமக்கள் குடும்பத்தோடு கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினார்கள்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 11:52 am
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
July 16, 2025, 11:14 am
வாகன மீட்பு முகவரின் அராஜகம்: அனுமதியை ரத்து செய்த அமைச்சு
July 16, 2025, 10:50 am
நியூசிலாந்து நாட்டின் உயர் அதிகாரிகளுடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பு
July 16, 2025, 10:26 am
கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் லாரி தீப்பிடித்து எரிந்தது கடுமையாக போக்குவரத்து நெரிசல்
July 16, 2025, 10:21 am
நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கொண்டு வரும் இரண்டு வங்கதேச ஆடவர்கள் கைது
July 16, 2025, 10:12 am