நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா பெலுட் பகுதியில் 14 வீடுகள் தீக்கிரையாகின

கோத்தா பெலுட்: 

இங்குள்ள கம்போங் மெலங்க்காப் காப்பா பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் அரை நிரந்தர கட்டிடங்களாக இருந்த 14 வீடுகள் முழுவதுமாகச் சேதமடைந்துள்ளன.

இதில், 10 வீடுகள் முழுமையாக எரிந்த நிலையில், மேலும் நான்கு வீடுகள் சுமார் 10 சதவீதம் அளவில் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை.

கோத்தா பெலுட் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் எல்கே பாகுக், காலை 10.57 மணிக்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஏழு தீயணைப்பு வீரர்களும், பிஎஸ்பி (தன்னார்வ தீயணைப்பு படை) பங்காலான் அபாய் பிரிவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். 

“காலை 11.48 மணிக்கு குழுவினர் சம்பவ இடத்தை அடைந்தனர். அங்கு 14 வீடுகள் தீக்கிரையானதைக் கண்டனர். இதில் 10 வீடுகள் 100 சதவீதம் எரிந்திருந்தன.

சாலை குறுகலாகவும், பாலத்தின் நிலை உறுதியற்றதாகவும் இருந்ததால், FRT தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்குள் செல்ல முடியவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

அருகிலுள்ள ஆற்றிலிருந்து நீரைப் பயன்படுத்தி, சுமார் 91 மீட்டர் நீளமுள்ள இரண்டு குழாய்கள், இரண்டு நீர்ப்பீச்சுகள் மூலம் தீயணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

“மதியம் 12.21 மணிக்கு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் தீப்பிடிக்க வாய்ப்பு இல்லாத வகையில், மீதமுள்ள சாம்பல், தீச்சுடர்களை அகற்றும் ‘ஓவர்ஹால்’ பணிகளும் மேற்கொள்ளப்பட்டன,” என்று அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset