செய்திகள் மலேசியா
சீனப் புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சோதனையில் 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
கோலாலம்பூர்:
சீனப் புத்தாண்டு 2026 பண்டிகையை முன்னிட்டு, சாலை போக்குவரத்து துறை “மோட்டார் சைக்கிள் சிறப்பு இயக்கம்” எனும் பணியில் 456 அபராதங்களை விதித்து, 22 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியுள்ளது.
இந்த சம்பவம் செந்தூல் பசார் டோல் பிளாசாவில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த நடவடிக்கையில் 53 சாலை போக்குவரத்து அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் மொத்தம் 912 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 152 வாகனங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பெரும்பான்மையாக உரிய வாகன ஓட்டுநர் அனுமதி இல்லாமை, வாகன பதிவுத்தாள் காலாவதி, காப்பீடு இல்லாத்து, போன்ற குற்றத்திற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இயக்கத்தில் 22 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு விசாரணைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. மேலும், வெளிநாட்டு வாகன ஓட்டுநர்கள் 11 பேர் சோதனை செய்யப்பட்டனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 22, 2026, 3:27 pm
பார்க்கிங் விவகாரம் வன்முறையில் முடிந்தது: கத்திக்குத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது
February 22, 2026, 1:28 pm
பங்சாரில் MMYC இஃப்தார் நிகழ்ச்சி: 500 தஹ்ஃபிஸ் மாணவர்கள், குழந்தைகளுக்கு உதவி
February 22, 2026, 12:18 pm
பெர்மாதாங் கெராய் பகுதியில் தீ விபத்து: 21 பேர் பாதிப்பு
February 22, 2026, 12:17 pm
நோன்பு நிறைவு பயணம் துயரமாக முடிந்தது: 28 வயது ஆடவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்
February 22, 2026, 11:35 am
இரவின் அமைதியை குலைத்த கம்பி திருட்டு சம்பவம்: காவல் துறை விசாரணையை மேற்கொள்கிறது
February 22, 2026, 10:25 am
பெர்சத்து கட்சியில் மறுசீரமைப்பு தொடக்கம்: முஹைதீன் யாசின்
February 21, 2026, 7:34 pm
ஓய்வுபெற்ற பெண்ணிடம் RM10,000 மோசடி: மயக்கி ஏமாற்றிய கும்பல்
February 21, 2026, 7:32 pm
