செய்திகள் மலேசியா
“மடானி அரசின் உறுதியான அரசியலும், பொருளாதாரமும் நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்துகிறது”: சைஃபுதீன் நசுதியான்
சுங்கைப்பட்டாணி:
பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, அரசியல், பொருளாதார செயல்திறனின் மூலம் அரசின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி வருவதாக டத்தோ ஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கெடா மாநில மக்கள் நீதிக்கட்சி தலைவரும், உள்துறை அமைச்சருமான அவர், மூன்று ஆண்டுகளாக தொடரும் சீரான ஆட்சியால் அரசியல் நிலைமை சரியாக இருப்பதுடன், பொருளாதார குறியீடுகளும் முன்னேற்றம் காட்டுகின்றன என்றார்.
எதிரணிகளின் உள் பிரச்சனைகளை நம்பாமல், தங்களின் பலத்தை தாங்களே கட்டியெழுப்புவதே அரசின் வலிமை எனவும் கூறினார்.
தற்போதைய சவால், அரசின் சாதனைகளை மக்களுக்கு தெளிவாகவும் எளிதாகவும் எடுத்துச் சொல்வதுதான் என்றும், அதன்மூலம் தொடர்ச்சியான ஆட்சியின் பயன்களை மக்கள் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் விளக்கினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரே பிரதமர் தலைமையிலான ஆட்சி நிலவியிருப்பது, முன்பு ஐந்து ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள் மாறிய காலத்திலிருந்து வேறுபட்ட நிலைத்தன்மையை காட்டுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 22, 2026, 3:27 pm
பார்க்கிங் விவகாரம் வன்முறையில் முடிந்தது: கத்திக்குத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது
February 22, 2026, 3:25 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சோதனையில் 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
February 22, 2026, 1:28 pm
பங்சாரில் MMYC இஃப்தார் நிகழ்ச்சி: 500 தஹ்ஃபிஸ் மாணவர்கள், குழந்தைகளுக்கு உதவி
February 22, 2026, 12:18 pm
பெர்மாதாங் கெராய் பகுதியில் தீ விபத்து: 21 பேர் பாதிப்பு
February 22, 2026, 12:17 pm
நோன்பு நிறைவு பயணம் துயரமாக முடிந்தது: 28 வயது ஆடவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்
February 22, 2026, 11:35 am
இரவின் அமைதியை குலைத்த கம்பி திருட்டு சம்பவம்: காவல் துறை விசாரணையை மேற்கொள்கிறது
February 22, 2026, 10:25 am
பெர்சத்து கட்சியில் மறுசீரமைப்பு தொடக்கம்: முஹைதீன் யாசின்
February 21, 2026, 7:34 pm
ஓய்வுபெற்ற பெண்ணிடம் RM10,000 மோசடி: மயக்கி ஏமாற்றிய கும்பல்
February 21, 2026, 7:32 pm
