செய்திகள் மலேசியா
இரவின் அமைதியை குலைத்த கம்பி திருட்டு சம்பவம்: காவல் துறை விசாரணையை மேற்கொள்கிறது
ஷா ஆலம்:
ஷா ஆலம் மூன்றாம் பகுதியில், கம்பி திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் குழுவை காவல் துறை தீவிரமாக தேடி வருகிறது.
பதினான்கு விநாடிகள் கொண்ட காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி, இரவு நேரத்தில் கம்பிகளை வெட்டி திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. நான்கு சக்கர வாகனமும் இதில் பயன்படுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ஷா ஆலம் மாவட்ட காவல் துறையின் உதவி ஆணையர் ராம்சே எம்போல் கூறுகையில், சம்பவ இடத்திற்கு அருகே வசிக்கும் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்டு விழித்த அவர், அடையாளம் தெரியாத ஆடவர்கள் கம்பிகளை வெட்டுவதை கண்டுள்ளார்.
அவர்களை பின்தொடர முயன்ற சாட்சியை சந்தேக நபர்கள் எச்சரித்ததுடன், திரும்பி அவரை துரத்த முயன்ற பின்னர் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கண்டறிந்து கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இழப்புத் தொகை குறித்து விசாரணை தொடர்கிறது.
தகவல் உள்ளவர்கள் முஹம்மது சம்ரி அப்துல் ரஹ்மான் என்ற காவல் ஆய்வாளரை 01116652402 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது கம்பி திருட்டு செயல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 22, 2026, 3:27 pm
பார்க்கிங் விவகாரம் வன்முறையில் முடிந்தது: கத்திக்குத்தில் ஈடுபட்ட ஆடவர் கைது
February 22, 2026, 3:25 pm
சீனப் புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சோதனையில் 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
February 22, 2026, 1:28 pm
பங்சாரில் MMYC இஃப்தார் நிகழ்ச்சி: 500 தஹ்ஃபிஸ் மாணவர்கள், குழந்தைகளுக்கு உதவி
February 22, 2026, 12:18 pm
பெர்மாதாங் கெராய் பகுதியில் தீ விபத்து: 21 பேர் பாதிப்பு
February 22, 2026, 12:17 pm
நோன்பு நிறைவு பயணம் துயரமாக முடிந்தது: 28 வயது ஆடவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்
February 22, 2026, 10:25 am
பெர்சத்து கட்சியில் மறுசீரமைப்பு தொடக்கம்: முஹைதீன் யாசின்
February 21, 2026, 7:34 pm
ஓய்வுபெற்ற பெண்ணிடம் RM10,000 மோசடி: மயக்கி ஏமாற்றிய கும்பல்
February 21, 2026, 7:32 pm
