நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து கட்சியில் மறுசீரமைப்பு தொடக்கம்: முஹைதீன் யாசின்

பெட்டாலிங் ஜெயா: 

பெர்சத்து கட்சியின் பல பிரிவுகளில் இருந்த துணை அமைப்பு தலைவர்கள், குழு உறுப்பினர்கள் விலகியதை அடுத்து, அவற்றை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக பெர்சத்து கட்சித் தலைவர் முஹைதீன் யாசின் அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பிரிவுகளில் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். கட்சியின் கொள்கைகளுக்கு உறுதியான பல உறுப்பினர்கள் இந்த பொறுப்புகளை ஏற்க முன்வருவார்கள் என அவர் நம்பிக்கையாக தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்பை கண்காணிக்க, துணைத் தலைவர் பொறுப்புகளை மேற்கொள்ளும் அஹ்மத் பைசல் அசுமு, ராட்ஸி ஜிதின் இணைத் தலைவர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் செயலலகத்தை பொதுச் செயலாளர் அஸ்மின் அலி மேற்பார்வை செய்கிறார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset