நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு நிறைவு பயணம் துயரமாக முடிந்தது: 28 வயது ஆடவர் சாலை விபத்தில் உயிரிழந்தார்

அலோர் ஸ்டார்: 

நோன்பு நிறைவு உணவுக்காக ஜித்ராவில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த காப்பி கடை ஊழியர் ஒருவர், சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தாருல் அமான் நெடுஞ்சாலையின் கெபலா பாதாஸ் பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்தது.

உயிரிழந்தவர் 28 வயதுடைய முஹம்மத் அடாம் ஐமான் அப்துல் ஹமீத் ஆவார். தலையிலும் உடலிலும் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தா ஸ்டார் மாவட்ட காவல் தலைவர் சையத் பஸ்ரி சையத் அலி பி கூறுகையில், இரவு 7.50 மணியளவில் விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழு, அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தது. உடல் அரசு மருத்துவமனையின் தடயவியல் பிரிவிற்கு அனுப்பப்பட்டு, பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset