நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகம் உட்பட இறுக்கமான இடங்களில் புகைப்பிடிக்க அரசு அனுமதிக்கலாம்: ஜூல்கிப்ளி

கோலாலம்பூர்:

உணவு விடுதிகளுக்கு வெளியே, குறிப்பாக இறுக்கமான இடங்களில் உள்ளவர்களுக்கு புகைபிடிக்கும் இடங்களை வழங்கப்படலாம்.

இது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலிக்கும் என்று சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மத் தெரிவித்தார்.

ஒரு உணவகத்திற்கு வெளியே மூன்று மீட்டர் மட்டுமே புகைபிடிக்க முடியும் என்ற தற்போதைய விதியை அனைத்து உணவகங்கள் கடைப்பிடிப்பது கடினம். ஆகையால் இது குறித்து சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது. 

சாப்பாட்டு வளாகத்திலிருந்து மூன்று மீட்டர் தூரம் மற்ற வளாகங்களுக்கு அருகில் இருப்பதை அமைச்சு புரிந்து கொள்கிறோம்.

அவர் புக்கிட் பிண்டாங் பொழுதுபோக்கு பகுதியில் நடந்த ஒரு நடைப்பயணத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset