நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலக தாய்மொழி தினம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும்: இளஞ்செழியன்

பெட்டாலிங் ஜெயா:

உலக தாய்மொழி தினம் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய வேண்டும்.

அதுவே தமிழ் அறவாரியத்தின் இலக்கு என்று அதன் தலைவர் இளஞ்செழியன் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், அப்படியொரு தினம் அனுசரிக்கப்படுகிறதா? அதுவும் உலக ரீதியில் அனுசரிக்கப்படுகிறதா என்ற கேள்வி இன்னமும் மலேசியர்களிடையே உள்ளது.

இந்நிலை மாற வேண்டும் என்ற அடிப்படையின் தமிழ் அறவாரியம் கடந்த 14 ஆண்டுகளா இந்த தாய்மொழி தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

பல்லின அமைப்புகளுடன் சேர்ந்த இந்த நிகழ்வுகள் நடத்தப்படுகிறது என்று இளஞ்செழியன் கூறினார்.

இதனிடையே இவ்வாண்டு தாய்மொழி தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 21ஆம் தேதி காலை 9 மணி முதல் தலைநகர் டேவான் பஹாசாவில் சிறப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

உலகத் தாய்மொழி தினம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

அதே வேளையில் அன்றைய தினம் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை எழுதுதல், வரைப்படம் வரைவது உள்ளிட்ட பல போட்டிகளும் அறிமுகம் செய்யப்படும்.

இந்த போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா வரும் மே 19ஆம் தேதி நடைபெறும் என்று அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் குகனேஸ்வரன் கூறினார்.

உலகத் தாய்மொழி தின நிகழ்வுகள் குறித்த மேல்விவரங்களுக்கு குமாரி உஷா 016-970 0765,  குகனேஸ்வரன் 012-463 4171 ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset