நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 42,000 கிலோ உடைத்த அரிசி பறிமுதல்

அலோர் ஸ்டார்: 

அண்டை நாடுகளிலிருந்து 42,000 கிலோ எடையுள்ள உடைத்த அரிசி கடத்தல் நடவடிக்கையைச் சுங்கத் துறை முறியடித்தது.

இந்தக் கடத்தல் முறியடிப்பு நடவடிக்கை பிப்ரவரி 6-ஆம் தேதி போக்கோக் செனாவில் நடந்தது. 

அலோர் ஸ்டார் அமலாக்கப் பிரிவு உறுப்பினர்கள் குழு, பொதுமக்களிடம் இருந்து தகவலைப் பெற்ற பின்னர், உள்ளூர் பதிவு எண் கொண்ட டிரெய்லரைக் கண்டுபிடித்தனர் என்று கெடா மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் நோர் இசா அப்துல் லத்தீஃப் கூறினார்.

டிரெய்லர் பிப்ரவரி 6-ஆம் தேதி டுரியான் பூரோங் சுங்கம், குடிநுழைவு, தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகத்தின் நுழைவாயில் வழியாக தாய்லாந்திலிருந்து நாட்டிற்குள் நுழைந்தது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அமலாக்க அதிகாரிகள் வாகனத்தை போக்கோக் செனா சாலையின் ஓரத்தில் நிறுத்தியப் பின் ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். 

மொத்தம் 42,000 கிலோ எடையுள்ள 840 சாக்கு உடைத்த அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. 

கைப்பற்றப்பட்டதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு 105,000 ஆகும் என்று அவர் கூறினார்.

மேலும் அதிக லாபம் ஈட்டுவதற்காக உடைத்த அரிசி உள்ளூர் அரிசி அல்லது இறக்குமதி செய்யப்பட்ட அரிசியுடன் கலக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset