நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உடன்பிறந்த சகோதரி கற்பழிப்பு: அண்ணன் மீது குற்றச்சாட்டு 

சிரம்பான்: 

தனது தங்கையுடன் முறைகேடான உறவில் ஈடுபட்டு அவளைக் கற்பழித்த இரு குற்றங்களுக்காக உடன்பிறந்த அண்ணன் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தொடரப்பட்டது.

22 வயதான அந்த நபர், குழந்தைகள் பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 16 (1) உடன் படிக்கப்பட்ட தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376B (1) இன் படி நீதிபதி டத்தின் சுரிதா புடின் முன் குற்றம் சாட்டப்பட்டார்.

10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் கசையடிக்கு வழி வகை செய்யும் பிரிவு 376B (1) சட்டமாகும். 

அதே சமயம் பிரிவு 16(1) இன் படி குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் இரண்டு கசையடிகளும் வழங்கப்படும். 

தனித்தனியாக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனது 12 வயது தங்கையுடன் ஜனவரி மற்றும் மார்ச் 2021-ஆம் ஆண்டில் தங்கள் வீட்டில் நடந்த சம்பவத்தின் போது உடலுறவு கொண்டார்.

பாதிக்கப்பட்டவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் உடன்பிறந்தவர்கள் மற்றும் ஒரே வீட்டில் வசிப்பதால் ஜாமீன் வழங்க வேண்டாம் என்று துணை அரசு வழக்கறிஞர் ஜிவான் கோர் மல்கித் சிங் முன் சம்பந்தப்பட்ட நபர் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களான ஹரேஷ் மகாதேவன் மற்றும் ரம்சானி இட்ரிஸ் ஆகியோர், குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது பொது பல்கலைகழகத்தில் டிப்ளமோ படிப்பைப் படிப்பதாகவும், தற்போது ஜொகூரில் நடைமுறைப் பயிற்சியில் உள்ளதாகவும் விசாரணை முழுவதும் முழு ஒத்துழைப்பை அளிப்பதாகவும் கூறி குறைந்தபட்ச ஜாமீன் கோரினர்.

சுரிதா ஒரு ஜாமீன் மற்றும் கூடுதல் நிபந்தனைகளுடன் RM10,000 ஜாமீன் வழங்கினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும். 

மேலும் மற்றொரு வீட்டில் வசிப்பதோடு பாதிக்கப்பட்டவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கு மார்ச் 18-ஆம் தேதி மீண்டும் செவிமடுக்கப்படும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset