நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடல் எல்லைகளில் உயர்நிலை பாதுகாப்பை உயர்த்தும் நடவடிக்கைகளைக் கடற்படை மேற்கொள்ள வேண்டும்: சைஃபுடின் நசுத்தியோன் 

குவாந்தான்: 

நாட்டின் கடல் எல்லைகளில் குற்றச் செயல்களைத் தடுக்க உயர்நிலைகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று உள்நாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறியுள்ளார்.

கடல் எல்லைகளை நடக்கும் குற்றங்களின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுப்பது கடற்படையின் முதன்மை கடமையாகும்.  

கடற்பரப்பைக் கட்டுப்படுத்த அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பு அமைப்பில் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

தேசிய கடற்படையின் பணியானது முக்கியமாகக் கருதப்படுகின்றது. காரணம், அவர்கள் நாட்டின் நீர் எல்லைகளையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அதனால் கடல் எல்லைகளில் எப்போதும் அவர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான பலனை இறைவன் எதிர்ப்பார்க்காமல் கொடுப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset