நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை அரசாங்கம் கண்காணிக்குமா?

கோலாலம்பூர்:

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை அரசாங்கம் கவனிக்குமா என்று தேசியக் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சரவணக்குமார் கேள்வி எழுப்பினார்.

மக்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவிக்கு வந்துள்ளார்.

அவரும் அவரின் ஒற்றுமை அரசாங்கமும் ஊழலுக்கு எதிராக போராடுகிறது. நாட்டின் மேம்பாட்டிற்கு இது அவசியம் தான்.

ஆனால் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.

குறிப்பாக வாழ்க்கை செலவின அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏன் போதுமான அரிசி விநியோகம் கூட மக்களுக்கு கிடைப்பது இல்லை.  

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் உணவுகளின் விலைகளும்  பல்மடங்கு உயர்ந்துள்ளது.

அரசு, தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிக்காததால் வாழ்க்கை செலவின உயர்வுடன் சிக்கி தவித்து வருகின்றனர்.

ஆகவே மக்களில் எதிர்கொள்ளும் இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset