நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பின் சவூதி அரேபிய நன்கொடை கடிதத்தின் பின்னணியில் இருந்தவர் ஜோ லோ: ஜாஸ்மின் லோ

கோலாலம்பூர்:

நஜீப்பின் சவூதி அரேபிய நன்கொடை கடித்தத்தின் பின்னணியில் இருந்தவர் ஜோ லோ என்று 1 எம்டிபி முன்னாள் சட்ட ஆலோசகர் ஜாஸ்மின் லோ தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு சவூதி அரேபியாவின் அரச குடும்பம் நன்கொடை வழங்குவதாகக் கூறப்படும் கடிதம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த கடித விவகாரத்திற்கு பின்னணியில் இருந்தவர் ஜோ லோ.

ஜோ லோ மறைந்த கீ கோக் தியாமுக்கு விளக்கமளிக்க கடிதத்தின் நகலைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டார்.

நஜீப் வங்கி கணக்கில் அதிக அளவு பணம் சென்றதை அடிப்படையாக கொண்டு இந்த கடிதம் தயாரிக்கப்பட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு லண்டனில் உள்ள மேஃபேர் ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் அவரையும், கீ, மேலும் இரண்டு நபர்களுடன் சந்திப்பில் இணைய  ஜோ லோ கேட்டபோது அது எப்படி நடந்தது என்பதை தான் பார்த்ததாக கூறினார்.

இஹ்சான் பெர்டானா நிறுவன இயக்குநர் ஷம்சுல் அன்வர் சுலைமான், யாயாசான் ரக்யாட் 1 மலேசியா திட்டத்தின் இயக்குநர் டெனிஸ் சீ ஆகியோரே மேற்கண்ட இருவராவார்.

நஜிப்பிற்கு எதிரான 2.27 மில்லியன் 1 எம்டிபி ஊழல் வழக்கு விசாரணையின் போது ஜாஸ்மின் லோ இவ்வாறு சாட்சியமளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset