நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக ஊடகங்களில் இரகசியம் கசிவு; காவல்துறையும் ஒரு காரணம்: அலாவுதீன் அப்துல் மஜித்

கோலாலம்பூர்:

போலீஸ்காரர்கள் அது சார்ந்த உறுப்பினர்களில் பலர் சமூக ஊடகங்களில் இரகசியத் தகவல்களைக் கசியவிட்டுள்ளதை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் அலாவுதீன் அப்துல் மஜித் ஒப்புக் கொண்டார்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் போலீஸ்காரர்கள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது. அதோடு நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்ச்றுத்தலாக உள்ளது என்றார்.

"அதிகாரப்பூர்வ இரகசியங்கள் சட்டம் 1972 (சட்டம் 88) இன் இரகசியத்தன்மையின் கொள்கைகள் கடைபிடிக்கப்பட வேண்டும், இஃது அதிகாரப்பூர்வ ரகசியங்களாக வகைப்படுத்தப்பட்ட தகவல்களைப் பரப்புவதைத் தடை செய்கிறது," என்று அவர் கூறினார்.

தொழில்நுட்பத்தின் இன்றைய விரைவான வளர்ச்சி, சம்பவத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல் தகவல்களைப் பரப்புவதில் அதிக வாய்ப்புகளை வழங்குகின்றது. இஃது ஒருவகையில் குற்றவியலை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

கோலாலம்பூர் போலீஸ் படை தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தில் பேசும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதற்கிடையில், கோலாலம்பூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஜனவரி மாதத்தில் 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் அது 1.8 மில்லியன் ரிங்கிட்டாக இருந்ததாகவும் அலாவுதீன் கூறினார்.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு குறைந்துள்ள போதிலும், 2023 ஜனவரியில் 1,333 நபர்களுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,352 ஆக அதிகரித்துள்ளது.

கோலாலம்பூர் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த ஆண்டு ஜனவரியில் 366 நடவடிக்கைகளை மேற்கொண்டு 421 பேரைக் கைது செய்துள்ளதாகவும் அலாவுதீன் கூறினார்.

- தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset