செய்திகள் மலேசியா
புதிய வர்த்தகத்தில் கால்பதித்தார் டிஎஸ்ஜி
கோலாலம்பூர்:
டத்தோஶ்ரீ ஜி என அனைவராலும் நன்கு அறியப்படும் டத்தோஶ்ரீ ஞானராஜா தம்மிஜி (TammyG) எனும் அழகு சாதன வணிகத்தில் கால்பதித்துள்ளார்.
தமது வர்த்தக இணை நிறுவனராக நடிகை தமன்னா பாத்தியாவுடன் இருக்கும் நிழற்படத்தைத் தமது சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்து இச்செய்தியை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஎஸ்ஜியின் துணைவியார் டத்தோ கீதாஞ்சலி ஜி தமது பிறந்தநாளை மிக விமர்சையாகக் கொண்டாடினார். அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்களுடன் இந்தப் பிறந்தநாள் விழா நடந்தேறியது.
இந்தப் பிறந்தநாள் விழாவில் நம்பிக்கையின் சார்பாக அதன் தலைமை மேலாளர் தயாளன் சண்முகம் கலந்து கொண்டார். அத்தருணத்தில் தாம் மும்பை செல்வதாகவும், கூடிய விரைவில் புதிய வர்த்தகத்தில் கால்பதிக்கவிருப்பதாகவும் டிஎஸ்ஜி சூசகமாகக் கூறியிருந்தார்.
கடந்த சில நாட்களாகத் தமது சமூகத் தளத்தில் தமது புதிய வர்த்தகம் குறித்த மறைமுகச் செய்திகளையும் அவர் வெளியிட்டு மக்களின் ஆர்வத்தைத் தூண்டியிருந்தார்.
இச்சூழ்நிலையில் இன்று தமன்னாவுடன் தாம் இருக்கும் நிகழ் படத்தை வெளியிட்டு தம்மிஜி (TammyG) எனும் அழகு சாதன தோல் பராமரிப்புத் தயாரிப்புத் தொழில் துறையில் கால் பதித்திருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
மில்கி ஸ்கின் (Milky Skin) எனத் தமது சருமத்தின் வாயிலாகவும், பல கோடி நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட தமன்னா, ஜெய்லர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலா திரைப்பாடலின் மூலம் அந்த எண்ணிக்கையைப் பன்மடங்கு உயர்த்தியவர்.
குறிப்பாக, 2010ஆம் ஆண்டு முன்னணி இயக்குநர் லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த தமன்னா, இத்திரைப்படத்தின் மூலமாகத் தமிழ் திரைத்துறையில் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர்.
அதோடு கல்லூரி, கண்டேன் காதலை, கண்ணே கலைமானே, தர்ம துரை போன்ற திரைப்படங்களில் சிறந்த நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதோடு வீரம், அயன், பாகு பலி, தேவி போன்ற வணிக ரீதியிலான வெற்றிப் படங்களிலும் நடித்தவர்.
தற்போது ஓடிடி தளங்களாக நெட்பிலிக்ஸ், அமேசோன் ஆகியவற்றில் முன்னணி பிரபலமாக வலம் வருகின்றார். தற்போது தமன்னாவும், மலேசிய மண்ணின் மைந்தனான டிஎஸ்ஜியும் தெலுங்கு திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த நட்புதான் புதிய வர்த்தகத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளதாகத் தெரிகின்றது.
அண்மையின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புரட்சித் தளபதி விஷால், நடிப்பு அசுரன் எஸ்.ஜே. சூர்யா ஆகியோருடன் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கோல்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கோலிவூட்டில் டிஎஸ்ஜி கால்பதித்தார். தற்போது பல திரைப்படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மும்பை நகரில் டிஎஸ்ஜி, தலைமையகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த புதிய வர்த்தகத் தொழில் துறையில் முதன்மை தளமாகவும் மும்பை விளங்கவுள்ளது. முன்னதாக அண்மையில் உலக வங்கியின் ஆலோசனை குழு உறுப்பினராக டிஎஸ்ஜி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் மற்றொரு பரிமாணத்தை நோக்கி டிஎஸ்ஜி நகர்கின்றார் என்பது இதன் வழி தெரிகின்றது.
டிஎஸ்ஜி அறிமுகப்படுத்தவிருக்கும் தம்மிஜி அழகு சாதன பொருட்கள் உலக அரங்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றது. இது மலேசியர்களுக்கு மிகப் பெரிய பெருமையாக உருமாறவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
November 27, 2025, 10:29 pm
கம்போங் ஜாவா லோட் வீடுகள் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது: பாதிக்கப்பட்ட மக்கள்
November 27, 2025, 10:14 pm
வெப்பமண்டல புயலால் பலத்த காற்றுடன் 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யலாம்: மெட் மலேசியா
November 27, 2025, 3:38 pm
பள்ளி விடுதி குளியலறையில் தாக்கப்பட்ட 4ஆம் படிவம் மாணவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்
November 27, 2025, 3:37 pm
அவதூறு பேசும் நீங்கள் பணக்காரர்கள்; மக்கள் ஏழைகள்: பிரதமர் காட்டம்
November 27, 2025, 1:49 pm
எச்ஆர்டி கோர்ப் விருதுகள் 2025; மலேசியாவின் மனித மூலதன மேம்பாட்டு முயற்சிகளை அங்கீகரிக்கிறது: டத்தோ அஸ்மான்
November 27, 2025, 11:19 am
நான் இன அரசியலுக்கு எதிரானவன்: பிரதமர் அன்வார்
November 26, 2025, 12:33 pm
