நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலையை நோக்கி புறப்பட்டது வெள்ளி இரதம்

கோலாலம்பூர்:

தைப்பூச விழாவை முன்னிட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து  வெள்ளி இரதம் பத்துமலையை நோக்கி புறப்பட்டது.

நாட்டில் தைப்பூச விழா பிப்ரவரி 1
ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 

இதில் பத்துமலையில் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் பத்துமலை தைப்பூசத்தில் வெள்ளி இரத ஊர்வலம் முக்கிய அம்சமாக உள்ளது.

அவ்வகையில் வெள்ளி இரத ஊர்வலம் இன்று இரவு 9மணிக்கு தலைநகர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்து செல்கின்றனர்.

ஜாலான் துன் எச்.எஸ்.லீ., ஜாலான் சுல்தான், ஜாலான் புடு, ஜாலான் சுல்தான் பேராக், லெபோ அம்பாங், ஜாலான் அம்பாங், ஜாலான் முன்ஷி அப்துல்லாஹ், ஜாலான் டாங் வாங்கி, ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் பெலியா, ஜாலான் ஸ்ரீ அமரர், ஜாலான் ராஜா லாவுட், ஜாலான் ஈப்போ, ஜாலான் துன் ரசாக், பத்து லீமா, ஜாலான் கூச்சிங், எம்.எம்.ஆர். 2 ஆகிய சாலைகளை தொடர்ந்து வெள்ளி ரதம் பத்துமலை திருத்தலத்தை வந்தடையும்.

இந்த வெள்ளி இரத ஊர்வலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆகவே பக்தர்கள் பாதுகாப்புடன் இந்த வெள்ளி இரத ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset