செய்திகள் மலேசியா
பத்துமலை பிரதமர் மீண்டும் வருகை; இந்திய சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு, அக்கறைக்கு ஒரு சான்றாகும்: டத்தோஸ்ரீ ரமணன்
பத்துமலை:
பத்துமலைக்கு இரண்டாவது முறையாக பிரதமர் வருகை புரிந்தது இந்திய சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு, அக்கறைக்கு ஒரு சான்றாகும்.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.
மலேசியாவில் வாழும் இந்து மக்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை தைப்பூச விழாவை கொண்டாடவுள்ளனர்.
நாட்டில் தைப்பூச கொண்டாட்டத்திற்கு தாய் கோவிலாக பத்துமலை விளங்குகிறது.
லட்சக்கணக்கான மக்கள் திரளும் இந்த தைப்பூச விழா ஏற்பாடுகளை காண பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று பத்துமலைக்கு வந்திருந்தார்.
அவருடன் நானும் சென்றிருந்தேன்.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா பிரதமரை வரவேற்றார்.
பத்துமலைக்கு பிரதமரின் வருகை இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் மீதான அவரது அர்ப்பணிப்பு, அக்கறைக்கு ஒரு சான்றாகும்.
இதுதான் நம் நாட்டின் மகத்துவம். ஒருவருக்கொருவர் ஒற்றுமைக்கான வலுவான அடித்தளம்.
மேலும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், இந்திய சமூகத்தின் மேம்பாட்டில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் இந்திய சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான மூலோபாய நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இதனால் தேசிய வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்தினரும் உள்ளடக்கிய பங்களிப்பை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 30, 2026, 9:53 pm
பத்துமலையை நோக்கி புறப்பட்டது வெள்ளி இரதம்
January 30, 2026, 5:34 pm
மலேசிய RON95 பெட்ரொலை வாங்கும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்
January 30, 2026, 4:03 pm
சமயத்தை சச்சரவுக்கான கருவியாக மாற்ற வேண்டாம்: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன்
January 30, 2026, 2:48 pm
TVET பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் 95 சதவீதத்தைத் தாண்டியது: ஜாஹித்
January 30, 2026, 12:26 pm
கிள்ளான் பகுதியில் தீயணைப்பு வீரர்களின் உடனடி நடவடிக்கை: சாலை விபத்து தவிர்க்கப்பட்டது
January 30, 2026, 12:20 pm
பொம்மை கடையில் தீ விபத்து: சுமார் RM 1 மில்லியன் இழப்பு
January 30, 2026, 11:50 am
நீதிமன்ற உத்தரவுகளை பொருட்படுத்தாமல் குப்பை சேகரித்து வந்த 69 வயது பெண்ணின் பிடிவாதம்
January 30, 2026, 11:16 am
தப்பிக்க முயன்ற 218 வெளிநாட்டவர்கள் ட்ரோன் உதவியுடன் அதிரடி கைது
January 29, 2026, 11:05 pm
